திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்சை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நியமனம் செய்தார். இதனையடுத்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இன்று ( 19.10.2023 ) அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் கோவிந்தராஜன் முன்மொழிய அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சோபியா விமலாராணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளிதரன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார், கே.கே.ஆர்.ராஜலிங்கம், முத்துகிருஷ்ணன், கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை, மகளிர் அணி ஷீலா ஷெலஸ், அழகர், மலர், வெங்கடேசன், பாலு, சரவணன், ஜெயம் கோபி, கிருஷ்ணா , முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, தியாகி சுந்தரனார், சையது இப்ராஹிம் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 
அதன் பின்னர் மாநகா் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையிலான நிர்வாகிகள் பெருந்தலைவர் காமராஜர், காந்தி, தியாகி அருணாச்சலம் ஆகிய தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகா் மாவட்ட தலைவா் எல்.ரெக்ஸ் மாநகராட்சி கவுன்சிலராகவும் உள்ளாா் என்பது குறிப்பிடதக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.