Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்…!

இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து வாக்குத்திருட்டியில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டி வருவதோடு பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மலைக்கோட்டை காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 14 வது வார்டு பகுதியில் மாநகர மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி, மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி முன்னிலையில் வார்டு தலைவர் முகமது ரபிக் ஏற்பாட்டில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர். நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் உறந்தை செல்வம், கோட்ட பொருளாளர் மோகன் , கோட்ட பொதுசெயலாளர் முகமது ஆரிஃப், பரத், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், இலக்கிய பிரிவு பத்தபநாபன், விஜயலட்சுமி, பரமசிவம், சரவணன், மகேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்