வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை …!
சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல், ஆர்.மனோகரன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் புல்லட்ஜான், அவை தலைவர் டி.ராமு, கழக அம்மா பேரவை இணை செயலாளர் ஜோதிவாணன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் மாநில, மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.