திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்… கழகச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழாவை 24ம் தேதி அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, எதிர்வரும் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழக முதல்வராக்க அயராது பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஆர்.ஜோதிவாணன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் ஆர்.வனிதா, வி.பத்மநாதன், பகுதி கழக செயலாளர்கள் எம்.ஏ.அன்பழகன், டி.ஏ.எஸ். கலிலுல் ரஹ்மான், எல்.கே.ஆர்.ரோஜர்,வி.வாசுதேவன், ஆர்.வெங்கட்பிரபு, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஆர்.ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, வி.கலைவாணன், கருமண்டபம் பி.சுரேந்தர், மலைக்கோட்டை எல்.முத்துக்குமார், காந்தி மார்க்கெட் பகுதி இணைச் செயலாளர் ஜெ.பிரேம் ஆனந்த், கழக செயற்குழு உறுப்பினர்கள் சதர் (எ) சதுரூதீன், வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.ரஜினிகாந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் இரா. எட்வின் ஜெயக்குமார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.ஞானசேகர், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் கோ.கு.அம்பிகாபதி, மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.தர்மராஜ், ராஜா, டாஸ்மாக் செந்தில்குமார், கழக நிர்வாகிகள் அக்பர் அலி, தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.