திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான்கென்னடி பணியிட மாற்றம்…!* சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்தவர் ஆர். ஜான்கென்னடி. இவரை, தஞ்சை காவலர் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஜான் கென்னடி மாற்றம் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை தரக்குறைவாக பேசுவது,காவல் கட்டுப்பாட்டு அறையில் இரவு நேரங்களில் பணியாற்றும் பெண் போலீசாரை வீடியோ எடுத்து மிரட்டுவது போன்ற பல காரியங்களை செய்து வந்தார். இதுதொடர்பாக அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இங்கு வந்த பிறகும் அவர் காவலர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். அண்மையில் இரவு ரோந்து பணியின் போது வாகன ஓட்டுனர் ஒருவரை தூங்கியதாக கூறி வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையரிடம், போலீசார் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது அவர் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
Comments are closed.