ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேலூர் பகுதியில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கொண்டு வந்தார். பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பூங்கா வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால், நாளை விடுமுறை இன்றி பூங்கா செயல்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு நாளை 15 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பூங்கா திறந்திருக்கும் என மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
Comments are closed.