திருச்சி, மலைக்கோட்டை வடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…* மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் பங்கேற்பு!
திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் சிந்தை எல்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மலைக்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் சிந்தாமணி எல்.முத்துக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.