Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் புதிய அறங்காவலர்கள் பொறுப்பேற்பு…!

உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் முக்கியமான மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் கடந்த பல வருடங்களாக அறங்காவலர் குழு அமைக்கப்படாமல் இருந்தது. கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில்  மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு  5 பேர் கொண்ட அறங்காவலர்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்த பா.சீனிவாசன், தாராநல்லூர் அலங்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மு.கருணாநிதி, மலைக்கோட்டை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த  ரா.கலைச்செல்வி, எடத்தெரு கீழ நெய்க்கார தெருவை சேர்ந்த வி.ஸ்ரீதர், காட்டூர் காவிரி நகரை சேர்ந்த மு.கோவிந்தராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஐந்து பேரும் இந்து சமய அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் லட்சுமணன் முன்னிலையில் கோவில் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு செயல் அலுவலர் அனிதா,  திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,  துணை மேயர் திவ்யா தனக்கோடி , மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, திமுக பகுதி செயலாளர்கள் ஆர்ஜி.பாபு, மோகன், ஏ.எம்.ஜி.விஜயகுமார், மணிவேல், வட்டச் செயலாளர் சுருளிராஜன், மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் தேவராஜ், ஜெயலலிலா மற்றும் சிவசங்கர், தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்  கே.பி டி.பழனிவேல்,  திருநாவுக்கரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம்,  ,மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், வெங்காய தரகு வர்த்தக மண்டி சங்கத்தின் செயலாளர் தங்கராஜ், பேரமைப்பு மாநில துணைத்தலைவர் கே.எம்.எஸ்.ஹக்கீம்,  பேரமைப்பு மாநில இணைச்செயலாளர்கள் தில்லை மெடிக்கல் மனோகரன், காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன், திருப்பதி,  பேரமைப்பு இளைஞரணி கே.எம்.எஸ்.  மொய்தீன், திருமாவளவன்,  அனைத்து வணிகர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்,  நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்