திருப்புவனம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு திருச்சி சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்…!
நகை திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது சரமாரியாக தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கேட்டும், இதில் ஈடுபட்ட போலீசார் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து அஜித்குமார் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அஜித்குமாரின் புகைப்படம் பொருந்திய பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வைத்து நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என முழக்கமிட்டனர்.
Comments are closed.