திருச்சி கீழ கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று இரவு மர்மநபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த பொன்மலை காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் திறக்கப்பட்டது. தற்போது மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் உண்டியலில் 2000 ரூபாய் வரை மட்டுமே இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.உண்டியல் தனியாக கழட்டி எடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்ததால் மர்மநபர்கள் உண்டியலை உடைத்து எடுத்து அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு உண்டியலை தூக்கி வீசி சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் ஆய்வு நடத்தினா். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


