அசைவ உணவுகளில் அதுவும் பிரியாணி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் கல்யாண பிரியாணி தான். அந்த அளவுக்கு திருச்சி மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இந்த உணவகம் ஒன்றாக கலந்து விட்டது என்றே சொல்லலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, தில்லைநகர், வயலூர் ரோடு, பாலக்கரை உள்பட பல்வேறு இடங்களில் தனது கிளைகளை நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது இந்த உணவகம். இங்கு மதியம் முதல் இரவு வரை சுட, சுட மட்டன் பிரியாணி தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் வழங்கப்படுகிறது. இரவு நேரங்களில் பசியோடு வருபவர்களுக்கு குறைந்த விலையில் பிரியாணி வழங்கப்படுகிறது.

இங்கு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஈஸ்டர் போன்ற பண்டிகை காலங்களில் ஸ்பெஷல் ஆஃபர் விலையில் பிரியாணி சமைத்து வழங்கப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும் மிகவும் குறைந்த விலையில் சஹர் சாப்பாடு வழங்கப்படுகிறது. இதன் உரிமையாளர் கே எம்.எஸ். ஹக்கீம் ஆவார். இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவருக்கு நாளை (05-05-2024)பிறந்த நாள் ஆகும். அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் ஆகியோர் நேரில் வாழ்த்துகின்றனர். திருச்சி கே.எம்.எஸ். கல்யாண பிரியாணி குழுமத்தினர் சேலம் திமுக மாநாட்டில் 2.5 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைத்து கொடுத்தனர். இதற்காக அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை பிறந்தநாள் காணும் கே.எம்.எஸ். ஹக்கிமுக்கு திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.