Rock Fort Times
Online News

திருச்சி, காட்டூர் மான்ட்ஃபோர்ட் பள்ளி 20-வது ஆண்டு விழா: 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது!

திருச்சி, காட்டூர் பகுதியில் அமைந்துள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளி 20-வது ஆண்டு விழா நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் 14ம் தேதி மாண்ட்ஃபோர்ட் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக திருநங்கைகள் உரிமை ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர், சகோதரி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கல்கி சுப்பிரமணியம், கௌரவ விருந்தினராக கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் எல்.அஜீதா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

நவ.15 சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்வில், சீனியர் பள்ளியின் தலைவர், திருச்சி மாகாண சுப்பீரியர் அருட்சகோதரர் ஏ.ஜான் பிரிட்டோ, தலைமை விருந்தினராக ரோமா, இத்தாலி துணை ஜெனரல் அருட்சகோதரர் வர்கீஸ், கௌரவ விருந்தினராக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் புதுமை மைய நிறுவனர், கல்வியாளர், எழுத்தாளர் பேராசிரியர் ஏ. முகமது அப்துல் காதர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். விழாவினை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் மற்றும் அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்