தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று அசத்தல்…!
திருச்சியில் கடந்த மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், தமிழ்நாடு மாநில அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், குமித்தே (சண்டை) 45 கிலோ எடை பிரிவில் திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி பி. லக்க்ஷனா வெள்ளி பதக்கம் வென்றார். அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோரமங்களா உள் விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு கராத்தே அணி சார்பாக 11 வயதினருக்கான குமித்தே பிரிவில் பி. லக்க்ஷனா பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர், திருச்சி திருவெறும்பூர், பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில் மாஸ்டர் ஆர். சுதாகரிடம் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.