பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர்- கொரடாச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (76820) ஏப்ரல் 30, மே 1-ம் தேதிகளில் தஞ்சாவூர் வரை மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) ஏப்.,30, மே 1-ம் தேதிகள் காரைக்கால் – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூர்-திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.