பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், திருவாரூர்-கீழூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி-காரைக்கால் டெமு ரயிலானது (75820) மே 28, 29, 30, 31, ஜூன் 1 ஆகிய 5 நாட்கள் காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி – திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக, காரைக்கால் – திருச்சி டெமு ரயிலானது (76819) இதே நாட்களில் காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.