திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு…!
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், கம்பரசம்பேட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட காவிரி நகர், கமலம் நகர், பாலாஜி நகர், ஜெயராம் நகர் மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை சீரமைப்பு, காவிரி குடிநீர் முறையாக வழங்குதல், மழைநீர் வடிகால் வசதி அமைத்தல், நிரந்தரமான தெரு விளக்குகள் அமைத்தல், காவேரி நகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை இவர்களின் கோரிக்கைகள் எதுவும் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதால் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் புறக்கணிப்பதாக முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு பிளக்ஸ் பேனரை காவேரி நகர் நுழைவுப் பகுதியில் வைத்துள்ளனர். இரு அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.