திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவராயநேரிக்கு பேருந்து வசதி…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயநேரிக்கு விடியல் மகளிர் பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து வசதியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று( ஆகஸ்ட் 19) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார், துணை மேலாளர்கள் சாமிநாதன், ராஜேந்திரன் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதிய பேருந்து இயக்கப்பட்டதன் மூலம் தேவராய நேரி பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் சென்று வர ஏதுவாக இருக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed.