திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பகுதியில் மத்திய பாதுகாப்பு படை கலன் தொழிற்சாலையின் ஒரு பிாிவான ஹெச்.இ.பி.எப் பணியாற்றி வந்தவர் செழியன் (57). இவர்களது மகன், மகள் இருவரும் சென்னையில் உயர்கல்வி படித்து வருகின்றனர். அவர்களுக்கு துணையாக செழியனின் மனைவி அங்கேயே தங்கியுள்ளார்.செழியன் தொழிற்சாலை அருகே குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், செழியன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே செழியன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த நவல்பட்டுபோலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து, குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததால் உயிரிழந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.