திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவரங்கம் தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த குழந்தைகள் 8 பேர் மூச்சுத் திணறல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குழந்தைக்கு மட்டும் தொடர் மூச்சு திணறல் உள்ளது, மற்ற 7 குழந்தைகள் நலமுடன், தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருந்து தனியார் காப்பகத்திற்கு மருத்துவர்கள் தினசரி சென்று சோதித்து வருகின்றனர். சரியான குழந்தைக்காப்பாளர் இல்லாததாலும், சரியாக தாய்ப்பால் வழங்காததுமே இது போன்ற நிகழ்வுக்கு காரணம். இவ்வாறு அரசு மருத்துவமனை டீன் நேரு கூறினார்.
