திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட மாட்டாது- * இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்!
திருச்சியில் புதிய மார்க்கெட் அமைக்கப்பட்டாலும் காந்தி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் 220 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை , சில்லறை விற்பனை என தனித்தனியாக புதிய மார்க்கெட் திருச்சியில் அமையும். புதிய மார்க்கெட் அமைக்கப்பட்டாலும் , மாநகரின் மையத்தில் இருக்கக்கூடிய காந்தி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படாது. காந்தி மார்க்கெட்டை சீர் செய்து , பெரிது படுத்துவதற்காக 50 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார் என்று பதில் அளித்தார்.
இந்த அறிவிப்பு காரணமாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.