Rock Fort Times
Online News

வெளிமாநில தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவதை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்கள் சாலை மறியல்…!

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 2000 பேர் உள்ளனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள் மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்று, உள்ளூர் தொழிலாளர்களை புறக்கணித்துவிட்டு பீகார் மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அமர்த்தி உள்ளனர். இது, மாநில அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலாகும். இதற்கு திருச்சி மாநகர காவல் துறையினரும் துணை போகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களை பணி அமர்த்தும் முதலாளிகளை கண்டித்தும், அதற்கு துணை போகும் திருச்சி மாநகர காவல்துறையை கண்டித்தும் சிஐடியு அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று( ஜூலை 11) காந்தி மார்க்கெட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, மணிமாறன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட நிர்வாகி எஸ்.கே.செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், தக்காளி மண்டி தலைவர் பாரதி, செயலாளர் சுப்ரமணி, மந்தை சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் ஜி.கே. குமார், தக்காளி கைவண்டி நிர்வாகி செந்தில் உள்பட 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்