திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய பெயரில் நிர்வாகிகள் தேர்வு தனரத்தினம் நகர் வலிமா மகாலில் நடைபெற்றது. கூட்டத்தில், தலைவராக எம்.கே.எம்.காதர் மைதீன், செயலாளராக என்.டி.கந்தசாமி, பொருளாளராக ஜி.வெங்கடாசலம் (எஸ்.வி.எஸ்)ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளராக வி.என். கண்ணதாசன் (வி.என்.கே), இணை ஒருங்கிணைப்பாளராக எஸ்.எம்.டி.சபி முகமது, அவைத் தலைவர்களாக யு.எஸ்.கருப்பையா (யு.எஸ்.கே), ஜி. பாலசுப்பிரமணி (ஜி.பி.எம்)ஆகியோர்களும், ஆலோசகர்களாக வெங்காய மண்டி ஏ. தங்கராஜ், எஸ்.பி. பாபு, கே.ஆர்.ராஜா (நாட்டு காய்கறி), ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம் (பொதுநல சங்கம்) ஆகியோர்களும், துணைத் தலைவர்களாக கே.டி.தங்கராஜ் (கிழங்கு – மாங்காய் சங்கம்), எம்.இ.எஸ். சபி முகமது (பச்சை மிளகாய்), எம்.ஐ. குத்புதீன் ( பூ ,புஷ்ப மண்டி), ஆர்.ஜி.பாபு (தேங்காய்மண்டி), டி.ஏ.எஸ்.கலீலுல் ரகுமான் ( தக்காளி கமிஷன் மண்டி), கே.பி.மோகன் (பரங்கி, பூசணி ), ஆர்.சீனிவாசன் எஸ்.எஸ்.வி.(எலுமிச்சம்பழம்), மல்லி பி.சேகர் (மல்லி புதினா), எஸ்.மோகன் (டிஜிடி ,இஞ்சி), ஆகியோர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைச் செயலாளர்களாக எஸ்.எஸ்.டி.எஸ். ரமேஷ் (உருளை) ,எம்.சி.சி சின்னச்சாமி (மந்தை), எஸ்.எம்.எச். சுல்தான், ஏ.பாலசுப்பிரமணி (வெல்லம் – மளிகை), இ.தனபால் (தேங்காய்) , எஸ்.பக்ருதீன் (இஞ்சி, சேனை), பி.சொக்கலிங்கம் ( பூ, புஷ்பம்), எஸ்.எம்.கார்த்திகேயன் (காளான்மொத்தம் ), கே.எம்.வி.வடிவேல் பாபு, பி.ரஜினிகாந்த் ( டி.டி.சி, இங்கிலீஷ் காய்கறி ) ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், 25 சங்கங்களின் இந்த கூட்டமைப்பின் மூலமாக இனிவரும் காலங்களில் காந்தி மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வியாபாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, நலன்களை ஒருமித்த கருத்துடன் மாநில, மாவட்ட, மாநகர ,அரசு நிர்வாகங்களை அணுகுவது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments are closed.