திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி மற்றும் இனியானூர் ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு… துரை வைகோ எம்பி க்கு பொதுமக்கள் பாராட்டு!
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனியானூர் ஊராட்சி மற்றும் உத்தமர்சீலி ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள், எம்.பி துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனியானூரில் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோல திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வலியுறுத்தினார். அதனடிப்படையில் தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி எம்பி துரை வைகோவின் முயற்சியினால் வாட்டர் டேங்க் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.