சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாலை அணிவித்து மரியாதை…!
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாளான இன்று( ஜூன் 1) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தியாகராஜ பாகவதர் முழு உருவ சிலைக்கும், பெரும்பிடுகு முத்தரையர் முழு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.