Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பதிவுக்கட்டணமின்றி உறுப்பினராக அழைப்பு..

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பதிவுக் கட்டணமின்றி உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம் என வாசகர் வட்டம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி  மேலரண்சாலையில், மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. இதில்  உறுப்பினராக ஒருமுறை பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டையொட்டி, நூலகத்தில் உறுப்பினா் ஆ வோருக்கான பதிவுக்கட்டணத்தை மாவட்ட வாசகர் வட்டம் மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கமும் செலுத்த முன்வந்துள்ளன. அந்த வகையில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கையில், முதல் 500 உறுப்பினர்களுக்கான பதிவுக்கட்டணத்தில் 250 பேருக்கான கட்டணத்தை ரோட்டரி பீனிக்ஸ் சங்கமும், 250 பேருக்கான கட்டணத்தை வாசகர் வட்டமும் செலுத்தவுள்ளன. எனவே, இந்த வாய்ப்பை மாணவ, மாணவர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இலவசமாக உறுப்பினராக பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய வருவோர், தங்களது ஆதார் அட்டை நகல் கொண்டு வருவது அவசியம். இத்த கவலை மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் சு. தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்