Rock Fort Times
Online News

திருச்சி  மாநகராட்சி ஊழியர் தற்கொலை…

திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 34). இவர் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மணிமேகலை என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கணேஷ், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று எலி மருந்தை தின்றுவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை மணிமேகலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்