திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவகர் மாற்றப்பட்டு புதிய தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருநாவுக்கரசர் எம்.பி. செயல்பாடுகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று ( 18.10.2023 ) திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு அலுவலகத்தை இழுத்து பூட்டினர். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் காங்கிரஸ் அலுவலகத்தை பூட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கட்சியின் துணை தலைவர் வழக்கறிஞா் சிக்கல் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 20 பேர் மீது அத்துமீறி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தது, அங்கிருந்தவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசரை பற்றி அவதூறாக பேசியது, அதனை தட்டி கேட்டவரை கொலை செய்துவிடப்போவதாக மிரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.