Rock Fort Times
Online News

திருச்சி, அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 47.7 ஏக்கர் பரப்பளவிலான அரியமங்கலம் குப்பை கிடங்கில் சுமார் 10 லட்சம் டன் குப்பைகள் மலைப்போல குவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகரின் 65 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் சுமார் 750 டன் குப்பைகள் அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர், காற்று ஆகியன மாசுபடுகிறது. அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுகிறது. இந்த குப்பை கிடங்கை சுற்றிலும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
ஆகவே, அரியமங்கலம் குப்பை கிடங்கை முற்றிலும் அகற்றிவிட்டு, அங்கு ஏழை, எளிய மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித்தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குப்பை கிடங்கு முன்பாக காட்டூர் பகுதி குழு நவநீதகிருஷ்ணன்,பாலக்கரை பகுதிக்குழு கனல் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜா, கார்த்திகேயன், மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் .

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்