Rock Fort Times
Online News

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஊர்க்காவல் படையில் பணி… ஆணைகளை வழங்கினார், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி…!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கும் வகையில் அவர்களை ஊர்க்காவல் படையில் சேர்த்து பயிற்சி அளிக்க முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் 50 மூன்றாம் பாலினத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 15 நாட்கள் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில், திருச்சி மாநகர ஊர்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட 5 மூன்றாம் பாலினத்தவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். அதனைத்தொடர்ந்து இன்று (13.01.2026) திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி ஐபிஎஸ், பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களை மாநகர ஊர்காவல் படையில் இணைத்தார். அவர்களுக்கு பணியில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த காவல் ஆணையர், சிறப்பாக பணியாற்றி பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்ய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்