தாம்பரம் வரை இயக்கப்பட்ட திருச்சி சோழன், ராக்போர்ட் விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் வரை இயக்கம்…!
தாம்பரம் வரை இயக்கப்பட்ட திருச்சி சோழன், ராக்போர்ட் விரைவு ரயில்கள் மீண்டும் எழும்பூர் வரை இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சில ரெயில்கள் சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் /நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, பயணத்தை எளிதாக்க, தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்ட சில ரெயில்கள் இப்போது எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.
- சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12653/12654) முன்னதாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் தற்போது எழும்பூர் வரை செப்டம்பர் 17, 2025 முதல் இயக்கப்படும்.
- மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12638 / 12637 ) முன்னதாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும்.
- சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22675 / 22676) செப்டம்பர் 18, 2025 முதல் வழக்கம் போல் சென்னை எழும்பூரில் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.