திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் சிவா. கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிற நபர் என்ற பெயரை எடுத்தவர் . அவர் இன்று (10. 04. 2023 ) மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் . அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது . இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.