Rock Fort Times
Online News

திருச்சி தொழிலதிபர் எஸ்.கே.டி பாண்டியன்…எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார் !

திருச்சி, தாராநல்லூர் பகுதியை சேர்ந்த எஸ்.கே.டி வினோதினி நினைவு கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை தலைவர் எஸ்.கே.டி பாண்டியன், இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் துணை மேயரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான ஜெ.சீனிவாசன் செய்திருந்தார்.

திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த தொழிலதிபரும், எண்ணற்ற கல்வி மற்றும் சமூக நலபணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளருமான எஸ்.கே.டி பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன், அக்டோபர் 22ம் தேதியான இன்று, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் முருகானந்தம், வினோத்குமார் மற்றும் சித்ரா பாண்டியன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்