தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துவிட்டு டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த திருச்சி பாஜக நிர்வாகி இல.கண்ணன்…!
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அவர் பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 26 ம் தேதி இரவு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் 27-ம் தேதி காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்த அவர் அங்கு நடைபெற்ற ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிட்ட அவர், நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர், திருச்சியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட அவரை பெரம்பலூர் மாவட்ட பாஜக மாநில பார்வையாளர் இல.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
Comments are closed.