திருச்சி பார் அசோசியேசன் சார்பில் இ.லைப்ரரி தொடக்க விழா- * உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு…!
திருச்சிராப்பள்ளி பார் அசோசியேசன் சார்பில் இ.லைப்ரரி தொடக்க விழா மற்றும் பார் அசோசியேசன் முன்னாள் தலைவர் ஜி. பாலசுந்தரம் நூற்றாண்டு விழா
திருச்சி கோர்ட் யார்டு ஹோட்டலில் இன்று(23-08-2025) நடந்தது. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சூரியகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், ஆர் மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரா மோகன்ஸ்ரீ வத்சவா, நீதிபதிகள் அனிதா சுமந்த், பி.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி. கணேசன் வரவேற்று பேசினார். முடிவில் செயலாளர் சி. முத்துமாரி நன்றி கூறினர். விழாவில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் லட்சுமணன், முன்னாள் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் மற்றும் மாவட்ட நீதிபதிகள், பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் வடிவேல்சாமி, இணைச் செயலாளர் விக்னேஸ்வரன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர் வரகனேரி சசிகுமார், இரா பிரபு , முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.