Rock Fort Times
Online News

திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – 4 போ் கைது

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர்  பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.   இந்நிலையில் நேற்று ( 22.10.2023 ) இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. இச்சம்பவம் காரணமாக வீட்டின் முன்பு சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினா் . தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை ஆய்வு செய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் ராகுல் வயது (22),குணசேகரன் என்பவரது மகன் சச்சின் வயது (24) ராஜசேகர் என்பவரது மகன் ராக்கி என்கிற ராகேஷ் வயது (22), கீழ கல்கண்டார் கோட்டை அண்ணா நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் லோகேஷ் வயது (23) ஆகிய நான்கு பேரையும் திருவெறும்பூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை கொண்டு ரவிச்சந்திரன் வீட்டில் அடித்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்தபோது வீட்டின் அருகில் உள்ள பாலக்கட்டையில் தினமும் மாலை நேரங்களில் இவர்கள் நான்கு பேரும் அமருவதாகவும் இதனை ரவிச்சந்திரன் கண்டித்து வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் அவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளனர். கைதான 4 பேர் பல்வேறு அடிதடி மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்