Rock Fort Times
Online News

திருச்சி அரியமங்கலத்தில் பரபரப்பு: கொலை வழக்கில் சிக்கிய வாலிபரை கொல்ல முயற்சி.

சிறுவன் உட்பட 3 பேர் கைது!

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் இப்ராஹிம் (வயது48) சாம்பிராணி வியாபாரியான இவர் காந்தி மார்க்கெட் கடைகளுக்கு சாம்பிராணி சப்ளை செய்து வருகிறார். கோவையில் வசித்து வரும் இவரது மகன் முகமது கமாலுதீன்  பல்லடம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொலை வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரம்ஜான் கொண்டாடுவதற்காக முகமது சொந்த ஊரான அரியமங்கலத்துக்கு வந்தார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அரியமங்கலம் சாமி தெரு பகுதியில் வைத்து முகமது கமாலுதீனுக்கும், திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி அண்ணா நகர் கண்ணதாசன் தெரு பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா அமல்ராஜ் (18), திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (18) மற்றும் அரியமங்கலம் நாயுடு தெருவை சேர்ந்த (17 )வயது சிறுவன், ஆகிய 4 நான்கு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நாலு பேரும் கமாலுதீனின் தலையில் மரக்கட்டையால் தாக்கி அவரை கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முகமது கமாலுதீன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோஸ்வா அமல்ராஜ், ஹரிஹரன், அந்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரையும்  கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய நவ்ஷாத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்