Rock Fort Times
Online News

திருச்சி, பெரிய மிளகு பாறையில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் கால் எலும்பு முறிவு… விபத்தைத் தடுக்க வேகத்தடை அமைக்க கோரிக்கை!

திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகிலுள்ள பெரிய மிளகு பாறையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால், கார்களும் இருசக்கர வாகனங்களும் அதிவேகமாக சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று (நவ. 07) காலை, அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் வேகமாக மோதியது. இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலியால் அவர் அலறித் துடித்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற மேலும் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்