திருச்சி அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்…!* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
திருச்சி மாநகர் மாவட்டம், தில்லை நகர் பகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையிலும், மாவட்ட பொறுப்பாளர் அறிவொளி மேற்பார்வையிலும் பூத் கமிட்டி சரி பார்க்கும் பணி நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன், பகுதி செயலாளர் எம்.ஆர். ஆர். முஸ்தபா, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு, பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினியர் கிருஷாந்த், மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, வட்டச் செயலாளர்கள் கணேசன், ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.