Rock Fort Times
Online News

திருச்சி அருகே 2 கார்கள் மோதி 3 பேர் பலி .

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி சென்ற காரும், எதிரே காரைக்குடியில் இருந்து வந்த காரும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதியது.இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் அறந்தாங்கி நோக்கிச் சென்ற காரில் பயணம் செய்த மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45), டிரைவர் கதிர் (47) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.இந்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார் படுகாயம் அடைந்த 5 க்கும் மேற்பட்டோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்