Rock Fort Times
Online News

கோயிலை காக்க உயிர் தியாகம் செய்தவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி !

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் மீது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் வேற்று மதத்தினர் படையெடுத்த பொழுது கோயிலை பாதுகாக்க முயற்சித்த 12 ஆயிரம் பெருமாளின் பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையிலும், கோயிலில் முகாமிட்டிருந்த வேற்று மத தளபதியை இங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக கோயிலில் நடனம் மற்றும் கைங்கரியம் செய்து வந்த வெள்ளையம்மாள் எனும் பெண்
ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்திற்கு மேல் தளபதியை அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை தள்ளிவிட்டு பின்னர் தன் உயிரையும் தியாகம் செய்தார்.

அவரது இந்த தியாகத்தை நினைவூட்டும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென்பாரத திருக்கோயில் திருமடங்கள் அமைப்பு சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் கோயில் வெள்ளை கோபுரம்முன் மோட்சதீபம் ஏற்றி வழிபட முற்பட்டனர். அதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் அனுமதி மறுத்ததை யடுத்து திருக்கோயில் திருமடங்கள் மாவட்ட அமைப்பாளர் அனந்த பத்மநாதன் தலைமையில்
பக்தர்கள் பாசுரங்கள் பாடினர்


அதன்பின் திருக்கோயில் திருமடங்கள் அமைப்பாளர் சரவண கார்த்திக் 12 ஆயிரம் பெருமாள் பக்தர்கள் மற்றும் வெள்ளையம்மாள் உயிர் தியாகம் குறித்து பேசினார். பின்னர் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பு திருச்சி மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கர் ஜி, அழகு யுவராஜ், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட அனைவரும் வெள்ளை கோபுரத்துக்கு மலர் தூவி தரையில் விழுந்து வணங்கினர். பின்னர் கோயிலுக்குள் சென்று பெருமாளை தரிசித்துச் சென்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்