தமிழக அரசின் ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் திருநங்கைகளும் பயன்பெறலாம்- திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன்…!
தமிழக அரசின் ‘புதுமைப்பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் மூன்றாம் பாலி னத்தவரும் பயன்பெறலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில், திருச்சி மாவட்டத்தில் சமூக நலத் துறையின்கீழ், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின் வழியாக உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
இத்திட்டங்களில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப் பாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் பயன்பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே 2025-26-ம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உயர் கல்வி பயின்று வரும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர் ஆகியோர் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.