திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு திருநங்கை குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு திருச்சி மத்திய சிறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சிறை வார்டன் மாரீஸ்வரன் மீது கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் மாரீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் சிறைத்துறை அதிகாரிகள் அவரை சஸ்பெண்டு செய்த னர். சிறை வார்டன் கைது செய்யப்பட்ட சம்பவம் சிறைத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.