வங்கதேசத்தில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. வங்தேசத்தின் தலைநகர் டாக்காவிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு மாகாணத்தின் பஹிராப் என்ற இடத்தில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த சரக்கு ரயில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு ரயில் பெட்டிகளும், பயணிகள் ரயில் பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. இந்த விபத்தில் 13க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. தகவலறிந்து வந்த மீட்பு படையினர், கவிழ்ந்து கிடந்த ரயில்பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.