Rock Fort Times
Online News

பஞ்சாபில் ‘குபு, குபு’ வென பற்றி எரிந்த ரயில்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…! (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் இருந்து சஹர்சாவுக்கு சென்ற ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பெட்டியில் இருந்து புகை வந்ததும் துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் ரயிலின் பிற பெட்டிகளை அதிலிருந்து துண்டித்தனர். எனினும், கொழுந்து விட்டு எரிந்த தீ 3 பெட்டிகள் வரை பரவியது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரெயிலின் 19-வது பெட்டியில் புகை வந்ததை பார்த்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியுள்ளனர். புகை அளவுக்கு அதிகமாக வந்ததும் பயணிகள் பெட்டியில் இருந்து வெளியே குதித்தனர். இதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் உடனடியாக சென்ற தீ அணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்