Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை…!

திருச்சி, செந்தண்ணீர்புரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மகன் ரஷீத் அகமது (வயது 28). இவரது மனைவி தனபிரியா ( 25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குடும்பத்தகராறில் மனைவி தனப்பிரியா கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்து காணப்பட்ட ரஷீத் அகமது வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஷீத் அகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்