Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி… !

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி (வயது 48), மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா (44) ஆகிய இருவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காற்றின் காரணமாக உயர்வழுத்த மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் 2 பெண்களும் அதனை மிதித்து விட்டனர். இதில், அவர்கள்  2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. இதன் காரணமாக சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் திரண்டனர்.  இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமரசம்பேட்டை போலீசார், மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு  2 பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வேலைக்குச் சென்ற
2 பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்