குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று (ஜூன் 12) மதியம் புறப்பட்ட விமானம் 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத்தின் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விமானம் மோதியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதில் நான்கு பேர் இளங்கலை மாணவர்கள் மற்றும் ஒருவர் முதுகலை மாணவர் என்றும் கூறப்படுகிறது.
Comments are closed.