கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய விளைநிலத்தில் உரம் வைக்கும் போது இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது. மின்னல் தாக்கி கழுதூரை சேர்ந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் உயிரிழந்தனர். ஒரு பெண்ணிற்கு 2 கண்களிலும் பார்வை பறிபோன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Comments are closed.