“மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் இடம் ஒதுக்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். போக்குவரத்திலும் குளறுபடி ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் தங்களது வாகனங்களோடு பல மணி நேரம் காத்திருந்தனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏ சி டி சி ஈவன்ட் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. ஏ.ஆர்.ரகுமானும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக சென்னை பள்ளிக்கரணை சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் தீபா சத்யன், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தை முறையாக கையாளாததால் சென்னை கிழக்கு சட்டம்- ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீஷா மிட்டலும் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, திருநெல்வேலி கிழக்கு சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.