Rock Fort Times
Online News

பகலில் மேற்கொள்ளப்படும் சாலை அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் …

          திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பாதாள சாக்கடைத்திட்ட பணியும் ஒன்றாகும். இந்த திட்டப் பணிகள் பல இடங்களில் முடிவடைந்த நிலையில் சில இடங்களில் இன்னும் முடிவு பெறாமல் இருக்கின்றன. இந்நிலையில் திருச்சி சாஸ்திரி ரோடு செல்லும் வழியில் தில்லை நகர் 5வது கிராஸ் முதல் சாலை அமைக்கும் பணிகள்   நடைபெற்று வருகிறது. கே.டி. தியேட்டர் சிக்னலில் இருந்து தில்லைநகா் வழியாக இருசக்கர வாகனம், கார் ஆட்டோ, பேருந்துகள்  செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.

சாஸ்திரி ரோடு தில்லைநகர் பிரிவு சாலைகளில் பாதாள சாக்கடை வேலைகள் நடைபெற்று சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியிலும் மக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். இதனால் தில்லைநகா் வழியாக ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாியான திட்டமிடல் இல்லாமல் பகலில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே சாலை அமைக்கும் பணியை இரவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்